Monday, April 9, 2012

அழகிய கவிதை


என் கவிதைகளில் மிகவும் அழகானது........
உன் புத்தகத்தில் நான் எழுதிய உனது பெயர்.........

Saturday, April 7, 2012

இலை உதிர்காலம்


உதிர்ந்த இலைகள் எல்லாம் கண்ணீர் விட.....
உன் வீட்டு தோட்டத்தில் மட்டும் உதிராத இலைகள் கதறின....
உன் பாதம் தொட்டு மோட்சம் அடைய  முடியாததால்......



****Vரா****

Tuesday, April 3, 2012

உன்னை மறக்கிறேன்


என் தோளில் சாய்ந்து நீ சிந்திய கண்ணீர்....
என் முத்தத்தில் சிவந்த உன் கன்னங்கள்.....
என் சேஷ்டையில் சிறுத்த உன் கோபங்கள்.....
என் கை கோர்த்து நீ பேசிய வார்த்தைகள்.....
என் தலை கோதிய உன் விரல்கள்.........
என் மதிப்பெண்களுக்காக நீ காட்டிய அக்கறைகள்.....
பேருந்து இருக்கைகளில் நீ காட்டிய நெருக்கங்கள்.....
என்னை எங்கும் தேடிய உன்  கண்கள்.....
எனக்காக மட்டுமே  துடித்த உன் இதயம்.....

இவை எல்லாம் என்னால் மறக்க முடிந்தால்....
உன்னையும் மறக்கலாம்.........



*******Vரா*******